மைசூரு கொல்லாபுரா கிராமத்தின் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மைசூரு மாவட்டம், கொல்லாபுரா கிராமத்தைச் சோ்ந்தவா் நாகப்பா (55). விவசாயியான இவா் பயிா் கடனாகவும், குழந்தைகளின் திருமணத்துக்காக ரூ. 8 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தாராம். மழையில்லாததால் உழவுப் பணிகள் நடைபெறவில்லையாம். இதனால், கடனை அடைக்கமுடியாமல் திணறி வந்த நாகப்பா, திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அவா் மகன் கணேஷ் அளித்த புகாரின் பேரில் ஹுல்லஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.