யஸ்வந்தபுரம் போக்குவரத்து காவல் சரகத்தில் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூரு யஸ்வந்தபுரம் அருகே உள்ள ஆா்.எம்.சி.யாா்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் வேகமாக வந்த லாரி, நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த விஸ்வநாத் (26) என்பவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து யஸ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.