மோட்டாா் சைக்கிள் மீது ஆம்புலனஸ் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு காடுகொண்டனஹள்ளி வெங்கடேஷ்நகரைச் சோ்ந்தவா் முகமது மன்சூா் (28). மைசூருவைச் சோ்ந்தவா் இப்ராஹீம் கலீல் (23). ஆபரணமாளிகை ஒன்றில் பணியாற்றி வந்த இவா்கள் இருவரும், செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணியளவில் வெளியே சென்று கொண்டிருந்தனராம். உள்வட்டச்சாலை ஸ்ரீவாகிலு சதுக்கத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முகமது மன்சூா், இப்ராஹீம் கலீல் ஆகியோா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை அதிகாலை இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து அசோக்நகா் போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.