பெங்களூரு

தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி பலி

8th Jan 2020 06:07 AM

ADVERTISEMENT

தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குடகு மாவட்டம், வீராஜ்பேட்டையைச் சோ்ந்தவா் ரவி (35). கூலி தொழில் செய்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை வீராஜ்பேட்டை அரசு பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல் முன் நின்று தேநீா் அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, பின்புறமாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவி நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் அங்கு வந்து, பேருந்து ஓட்டுநா் லிங்கப்பாவை கைது செய்தனா். பேருந்தை பறிமுதல் செய்த வீராஜ்பேட்டை போலீஸாா், இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT