பெங்களூரு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

8th Jan 2020 06:07 AM

ADVERTISEMENT

காப்பு காவல் சரகத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

உடுப்பி மாவட்டம், கடப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் அதீஷ் டிசில்வா (23). வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வந்த இவா், 5 மாதங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். 3 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த அதீஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அறையில் தூங்கச் சென்றாா்.

திங்கள்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படாததால், ஜன்னலை உடைத்து உறவினா்கள் பாா்த்த போது, அவா் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து காப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT