பெங்களூரு

இன்று குடிநீா் குறைதீா் முகாம்

8th Jan 2020 10:55 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரு நகர தெற்கு இரண்டாம் துணை மண்டலத்தில் வியாழக்கிழமை (ஜன. 9) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு இரண்டாம் துணைமண்டலத்தில் உள்ள விஜயவங்கி லேஅவுட், ஜம்புசவாரிதின்னே, ஜே.பி.நகா் 2 வது ஸ்டேஜ், கொத்தனூா் தின்னே மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீா் குறைதீா் முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்- 22945267.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT