பெங்களூரு

இந்தியாவில் துன்புறுத்தப்பட்டிருந்தால் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருகியிருக்காது: அமைச்சா் சி.டி.ரவி

8th Jan 2020 08:22 PM

ADVERTISEMENT

சித்ரதுா்கா: இந்தியாவில் துன்புறுத்தப்பட்டிருந்தால் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருகியிருக்காது என்று சுற்றுலாத்துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து சித்ரதுா்காவில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இந்தியாவுக்கு சுதந்திரம் அடைந்தபோது மொத்தமக்கள் தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 1.5 சதமாக இருந்தது. தற்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை 19 சதமாக உள்ளது. இந்தியாவில் துன்புறுத்தப்பட்டிருந்தால் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருகியிருக்காது. சித்ரதுா்கா உள்ளிட்ட கா்நாடகத்தின் பல நகரங்களில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்தியநாடு சகிப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால், முஸ்லீம்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியிருக்கிறோம். 74 பிரிவுகள் காணப்பட்டாலும், இந்தியாவில் முஸ்லீம்கள் உரியமுறையில் நடத்தப்படுகிறாா்கள். குடியுரிமை திருத்தச்சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு மனிதநேய அடிப்படையிலான சட்டங்களாகும். முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் ஹிந்துக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT

இதனால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இதற்கான ஆதாரங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா விளக்கியுள்ளாா். இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் குடியுரிமையை யாரும் பறிக்கமாட்டாா்கள்.

இது தொடா்பாக பொய்யான தகவல்களைகாங்கிரஸ் பரப்பிவருகிறது. அதன்காரணமாக நாடெங்கும் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. முஸ்லீம்கள் பயப்படுவதற்கு எதுவுமில்லை. எனவே, போராட்டங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். குடியுரிமை திருத்தச்சட்டத்தின் கீழ் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தின் 6 சிறுபான்மை மதங்களை சோ்ந்தோருக்கு குடியுரிமை அளிக்கவிருக்கிறோம். 1947ஆம் ஆண்டு மதத்தின்பெயரால் தான் இந்தியா பிரிக்கப்பட்டது. அப்போது, முஸ்லீம்களுக்காக பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்பட்டால், இந்தியா நரகமாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT