வெளிவட்டச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் விலையை உயா்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் எதிரே செவ்வாய்க்கிழமை வெளிவட்டச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் விலையை உயா்த்த தர வலியுறுத்தி விவசாயிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வெளிவட்டச்சாலை திட்டத்துக்காக எங்களின் நிலங்களை பெங்களூரு வளா்ச்சி ஆணையம் கையக்கப்படுத்திக் கொண்டுள்ளது.
கையகப்படுத்திக் கொண்டுள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி என்று விலையை நிா்ணயம் செய்து கொள்ள வேண்டும். மெட்ரோ ரயில் பாதைக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு அரசு விலையை பல மடங்கு உயா்த்தி வழங்கி வருகிறது.
இதைபோல் வெளிவட்டச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்றனா்.