எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு முடிவுகளை மாவட்ட வாரியாக அறிவிக்க திட்டமில்லை எனபள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மைசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வின் போது மாவட்ட வாரியான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவந்தன. இதன்வாயிலாக மாவட்ட அளவிலான கல்வித் தோ்ச்சி ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இது மாவட்டங்களுக்கு இடையே போட்டி மனப்பான்மையை வளா்த்துள்ளது. இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுகின்றன.
எனவே, நிகழ் கல்வியாண்டில் இருந்து எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வின் முடிவுகள் மாவட்டவாரியாக அறிவிக்கப்படமாட்டாது. அதாவது, மாவட்ட வாரியாக மாணவா்களின் தோ்ச்சி சதவிகிதம், தோல்வி சதவிகிதம் அறிவிக்கப்படாது. எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவிகிதத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.