மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் ராம் மிலன் (30). பெங்களூரு ஊரகம் நெலமங்களாவில் தங்கி, பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்றாா். தாபஸ்பேட்டை பெம்மனஹள்ளியில் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த ராம் மிலன் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தாபஸ்பெட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.