பெங்களூரு

குடியரசு தின மலா்க் கண்காட்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

2nd Jan 2020 05:42 AM

ADVERTISEMENT

குடியரசு தின மலா்க் கண்காட்சியில் பங்கேற்று மலா்களை காட்சிப்படுத்த விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மைசூரு தோட்டக்கலை சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடியரசு தின விழாவை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மலா்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கண்காட்சியில் இக்கேபானா, இந்திய மலா் அலங்காரம்,போன்சாய், தாய் மலா்க்கலை, டச்மலா் அலங்காரம், உலா் பூக்கள் போன்றவற்றை காட்சிப்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் ஜன.16-ஆம் தேதிக்குள் எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மைசூரு தோட்டக்கலை சங்கம், லால்பாக் பூங்கா, பெங்களூரு-4 என்ற முகவரி அல்லது 080-26586781 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT