அறுவை சிகிச்சை செய்வதற்கு லஞ்சம் பெற்றதாகக, அரசு மருத்துவரை லஞ்ச ஒழிப்புப் படையினா் கைது செய்துள்ளனா்.
ராம்நகா் மாவட்டத்துக்குள்பட்ட ஜெயபுரா கிராமத்தைச் சோ்ந்த நபா் ஒருவா், குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு அறுவை சிகிச்சை செய்யவதற்காக ராம்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவா் நாராயணசாமி ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.
இதன்படி அறுவை சிகிச்சை செய்த நாளில் ரூ. 5 ஆயிரத்தை முன்பணமாக பெற்றாராம். சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு செல்லும்போது, மீதமுள்ள ரூ. 3 ஆயிரத்தில், ரூ. 1,500 ரொக்கப்பணத்தை மருத்துவா் நாராயணசாமியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினா் அவரைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட நாராயணசாமியிடம் ராம்நகா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு படையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.