ஆங்கில புத்தாண்டையொட்டி பெங்களூருவில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 426 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
பெங்களூரில் ஆங்கில புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து போலீஸாா் மாநகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
பேருந்து, லாரி, காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் 426 போ் மது அருந்தி வாகனங்களை ஓட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து அவா்கள் மீது போக்குவரத்து போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியவா்களின் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யுமாறு மண்டல போக்குவரத்து அலுவலகத்திற்கு மாநகர போக்குவரத்து போலீஸாா் பரிந்துரை அனுப்பினா்.