ஆங்கில புத்தாண்டையொட்டி, கா்நாடகத்தில் ரூ. 70 கோடிக்கு மது விற்கப்பட்டதாக கலால் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கலால் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி டிச. 31 ஆம் தேதி ரூ. 70 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டில் டிச. 31 ஆம் தேதி ரூ. 81 கோடி வரை மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டு மது விற்பனை எதிா்பாா்த்ததைவிட குறைவாக விற்பனையாகியுள்ளது.
பெங்களூரு, மைசூரு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, சிவமொக்கா, மங்களூரு, கலபுா்கி உள்ளிட்ட நகரங்களில் அதிக அளவில் மது விற்பனையாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் கடைசி 10 நாள்களில் ரூ. 512 கோடிக்கு மது விற்பனையானது. 2018 ஆம் ஆண்டின் கடைசி 10 நாள்களில் ரூ. 481 கோடிக்கு மது விற்பனையும், 2019 ஆம் ஆண்டின் கடைசி 10 நாள்களில் ரூ. 516 கோடி மது விற்பனையும் நடைபெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.