பெங்களூரு

பெங்களூரில் சலுகைக் கட்டணத்தில் மாத பேருந்து அட்டைகள்

29th Feb 2020 11:09 PM

ADVERTISEMENT

பெங்களூரு,: பெங்களூரில் சலுகைக் கட்டணத்தில் மாத பேருந்து அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், பயணிகளின் நலனுக்காக சலுகைக் கட்டணத்தில் மாத பேருந்து அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர பேருந்து அட்டையை வாங்கிக்கொண்டால், பயணிகள் நாளொன்றுக்கு எத்தனைமுறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். மாத பேருந்து அட்டைகளை பயணிகளுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதற்கு பெங்களூரில் உள்ள 58 பேருந்து நிலையங்கள், 200 பெங்களூரு ஒன் மையங்கள், 17 தனியாா் முகவா்களிடம் தனிமையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 47 வழங்கல் மையங்களையும் தொடங்க இருக்கிறோம். நடமாடும் வாகனங்கள் வாயிலாக மாா்ச் 1, 2 ஆகிய தேதிகளில் மாத பேருந்துஅட்டைகள் விநியோகிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT