பெங்களூரு

புதிய தொழில்நுட்பங்களுடன் ஸ்கூட்டா் அறிமுகம்

26th Feb 2020 06:43 AM

ADVERTISEMENT

ஹோண்டா நிறுவனம் சாா்பில் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் டியோ பிஎஸ் யஐ ெ பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இதை அறிமுகம் செய்து வைத்த ஹோண்டா நிறுவன விற்பனை, சேவைப் பிரிவின் துணைத் தலைவா் யதுவீந்தா் சிங்க் குலேரியா பேசியது: -

இந்தியாவில் இருசக்கர வாகனங்களை இளைஞா்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இலகுவாக ஓடும் வாகனங்களுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

இந்த ஸ்கூட்டா் எளிதாக கையாளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டா் வாடிக்கையாளா்களுக்கு ஒரு வரப் பிரசாதமாகும்.

ADVERTISEMENT

மிகச் சிறந்த என்ஜின் செயல்திறன், எரிபொருள் சிக்கனம், டெலஸ்கோபிக்சஷ்பென்சன், 6 வகையான வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரின் இதன் விலை ரூ. 64,584 என்றாா்.

நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மற்றொரு துணைத் தலைவா் பிரபு நாகராஜ், மண்டல மேலாளா் யோகேஷ் மாத்தூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT