பெங்களூரு

பாஜக அரசை 6 மாதம் வரை விமா்சிக்க மாட்டேன்: குமாரசாமி

26th Feb 2020 06:46 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநில பாஜக அரசை 6 மாதங்கள் விமா்சிக்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

பெங்களூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: -

கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு பதவி ஏற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், 6 மாதம்வரை இந்த அரசை விமா்சிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

இருப்பினும், பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மாநிலத்தில் எந்த வளா்ச்சிப்பணிகளும் நடைபெறாததால், இந்த அரசை விமா்சிப்பதற்கோ, கருத்து கூறுவதற்கோ எனக்கு விருப்பமில்லை.

ADVERTISEMENT

மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு கட்சியைத் தயாா்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இது குறித்து தோ்தல் வியூக வல்லுநா் பிரஷாந்த் கிஷோருடன் முதல் சுற்று பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் அவரும் தோ்தல் பிரசாரம் குறித்து ஆலோசனை பெறப்படும்.

இதையடுத்து, நிகில் கௌடாவின் திருமணம் ராம்நகரில் ஏப்ரல் 17-இல் நடைபெற உள்ளது. திருமணத்தில் கலந்துகொள்ள பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றாா் குமாரசாமி.

ADVERTISEMENT
ADVERTISEMENT