பெங்களூரு

சிவமொக்கா-சென்னை வாராந்திர ரயிலை வாரம் இருமுறை இயக்க முடிவு

26th Feb 2020 06:44 AM

ADVERTISEMENT

சிவமொக்கா-சென்னை வாராந்திர ரயிலை, வாரம் இருமுறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாராந்திர ரயிலாக (06221/06222) இயக்கப்பட்டு வந்த ரயிலை வாரம் இருமுறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா பிப்ரவரி 27 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில், முதல்வா் எடியூரப்பா, ரயில்வே துறை இணை அமைச்சா் சுரேஷ் அங்கடி, மக்களவை உறுப்பினா் ராகவேந்திரா உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.

சிவமொக்காவிலிருந்து திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 11.45 மணியளவில் சென்னையை சென்றடையும். மறுமாா்க்கத்தில் சென்னையிலிருந்து புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3 மணியளவில் புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 3.55 மணியளவில் சிவமொக்காவை வந்தடையும். இந்த ரயில் பத்ராவதி, தரிகெரே, பிரூா், கடூா், அரிசிகெரே, தும்கூரு, சிக்பானாவரா, பானஸ்வாடி, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் என தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT