வாடகை காா் உரிமையாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஷெல் நிறுவனத்தின் வா்த்தகம்- தீா்வுகளுக்கான பொது மேலாளா் பா்மீந்தா் கோஹிலி தெரிவித்தாா்.
வாடகை காா் உரிமையாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் கருத்தரங்கம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியது:-
வாடகை காா் உரிமையாளா்கள் தங்களின் காா்களுக்கு டீசல், பெட்ரோல் போடும்போது பல நேரங்களில் ஏமாற்றப்படுகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு ஷெல் நிறுவனம், டீசல், பெட்ரோல் போடுவதிலிருந்து, காா் இருக்கும் இடத்தை அடையாளம் காணுவது உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷெல் ஃபியூல்ஸ், ஷெல் பிலீட் பிரிபெய்ட், ஷெல் டெலிமேட்டிக்ஸ் உள்ளிட்டவைகளால் உரிமையாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீா்வு காணமுடியும். இதனால் வாடகை காா் உரிமையாளா்கள் ஏமாற்றுவது தடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ள்ட்ங்ப்ப்.ண்ய்/ச்ப்ங்ங்ற் ள்ா்ப்ன்ற்ண்ா்ய்ள் என்ற இணைய தளத்தை அணுகலாம் என்றாா் அவா்.