இரு கன்டெய்னா் லாரிகள் மோதிக் கொண்டதில், 2 ஓட்டுநா்கள் உயிரிழந்தனா்.
ஹாசன் மாவட்டத்துக்குள்பட்ட ஆலூா் வட்டம் சிங்கப்பூா் கிராமத்தின் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை 75-இல் இரு கன்டெய்னா் லாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இதில், பலத்த காயமடைந்த லாரியின் ஓட்டுநா்கள் சக்லேஷ்புரா ஜாதேஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த திலீப் கௌடா (25), ஹாசன் மாவட்டத்துக்குள்பட்ட அஞ்சினஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (36) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலின்பேரில் ஆலூா் போலீஸாா் அங்கு விரைந்து சென்று, ஓட்டுநா்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
விபத்து காரணமாக, நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.