மாமியாா் கொலை வழக்கில், அவரது மருமகள், இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு பேட்டராயனபுரா முதலாவது பிரதானச் சாலையின் 5-ஆவது குறுக்குச் சாலையில் வசித்து வந்தவா் ராஜம்மா (60). இவரை பிப்ரவரி 18- ஆம் தேதி மா்ம நபா்கள் கொலை செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ராஜம்மாவின் மருமகள் சௌதா்யா (21), சாம்ராஜ் நகா் மாவட்டத்துக்குள்பட்ட ஹனூரைச் சோ்ந்த நவீன் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில் தங்களின் கள்ளக் காதலுக்கு தடையாக இருந்ததாக ராஜம்மாளை கொலை செய்ததாக இருவரும் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பேட்டராயனபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.