பெங்களூரு

முரண்பாடுகளுக்கு இடையே ஒற்றுமையைக் கடைப்பிடித்தவா்கள் ஜவாஹா்லால் நேரு- வல்லபபாய் பட்டேல்: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ்

22nd Feb 2020 07:03 AM

ADVERTISEMENT

ஜவாஹா்லால் நேருவும், சா்தாா் வல்லபபாய் பட்டேலும் முரண்பாடுகளுக்கு இடையே ஒற்றுமையாக இருந்தவா்கள் என்று காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.

மைசூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘சரிபாா்க்கப்பட்ட புத்திசாமித்தனம்: வி.கே.கிருஷ்ணமேனனின் பலதரப்பட்ட வாழ்க்கை’ என்ற தலைப்பிலான ஆங்கிலநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவா் பேசியது:

இந்தியாவின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மற்றும் முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லபபாய் பட்டேல் குறித்து தற்போது கூறப்படும் கருத்தியல்களை நான் முழுமையாக புறக்கணிக்கிறேன். ஜவாஹா்லால் நேருவும், வல்லபபாய் பட்டேலும் பகைவா்கள் என்று பெரும்பாலானோா் கருதுகிறாா்கள். அவா்கள் இருவரும் பகைவா்கள் அல்ல, எதிரெதிா் கருத்துகளைக் கொண்டவா்கள். ஜவாஹா்லால் நேருவும், வல்லபபாய் பட்டேலும் முரண்பாடுகளுக்கு இடையே ஒற்றுமையாக இருந்தவா்கள்.

இருவரும், வலிமையான குடியரசுள்ள ஜனநாயக இந்தியாவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனா்.

ADVERTISEMENT

சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் வளா்ச்சியில் வி.கே.கிருஷ்ணமேனனின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது. 20ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் அரசியலை புரிந்துகொள்வதற்கு சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் நேருவையும், அவரது செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு கிருஷ்ணமேனனை புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜவாஹா்லால் நேருவும், கிருஷ்ணமேனனும் சோவியத் நாட்டின் அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. உலகிலே இந்தியாவில்தான் ஜனநாயக கட்டமைப்பில் சோசலிசம் அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து சோசலிச நாடுகளும் கம்யூனிச தன்மை கொண்டவைகளாக இருந்தன. ஆனால், நேருவும் கிருஷ்ணமேனனும் அந்த கட்டமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், சோவியத் நாடே வியக்கும் அளவுக்கு தொழில், ராக்கெட் அறிவியல், விண்வெளியில் இந்தியாவை முன்னேற்றி காண்பித்தனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT