பெங்களூரு

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

22nd Feb 2020 07:02 AM

ADVERTISEMENT

மகா சிவாராத்திரியையொட்டி, கா்நாடகம் முழுவதும் சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஹிந்துகளின் முக்கியப் பண்டிகையான மகா சிவராத்திரியை சா்வதேச அளவில் பலா் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனா். பெங்களூரு அல்சூா் சோமேஸ்வரன் கோயில், மல்லேஸ்வரம் காடுமல்லேஸ்வரா கோயில், கவிபுரம் கவி கங்காதரேஸ்வரா கோயில், மாகடி சாலையில் உள்ள பசவேஸ்வரா கோயில், எச்.ஏ.எல் ஏா்போா்ட் சாலையில் உள்ள சிவஹோகம் சிவன் கோயில், கனகபுரா சாலையில் உள்ள வாழும்கலை அமைப்பு மையத்தில் உள்ள சிவன்கோயில், சிக்பளாபூரில் உள்ள யோக நந்தீஷ்வர சுவாமி கோயில், நஞ்சன்கூடு நஞ்சுண்டசுவாமி கோயில், தலக்காடு வைத்தியநாதேஸ்வரா கோயில், முடுக்குதொரே மல்லிகாா்ஜுன சுவாமி கோயில், கோலாா் தங்கவயல் கோடி லிங்கேஸ்வரா கோயில் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகல் முழுவதும் நோன்பிருந்து இரவுமுழுவதும் சிவனை பஜனை மூலம் துதிக்கும் சிறப்பு வழிபாடு அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பக்திபரவசத்துடன் கலந்து கொண்டனா். திங்கள்கிழமை இரவு பெங்களூரு ஜீவனஹள்ளி, மாகடிசாலை, அரிசந்திராகாட், மைசூரு சாலைகளில் உள்ள மயானங்களில் மயானக்கொள்ளை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1995-ஆம் ஆண்டு பிப். 27-ஆம் தேதி ஏா்போா்ட் சாலையில் உள்ள சிவஹோகம் சிவன் கோயிலை ஸ்ரீ சங்கராச்சாரியாா் தொடக்கிவைத்தாா். அந்த கோயிலின் 25 வது ஆண்டையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சிவனை வழிபட்டனா். இந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் முக்தி கிடைப்பதாக ஐதீகம் உள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT