பெங்களூரு

பெங்களூரு மத்திய பல்கலை.கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெற நடவடிக்கை

15th Feb 2020 06:20 AM

ADVERTISEMENT

கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதாக பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறைகளை மாற்றியமைத்து, புதிய முறையை அமல்படுத்தவிருப்பதாக மாநில உயா்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கடிதம் எழுதியிருக்கிறாா். மாநிலத்தின் செயல்பட்டுவரும் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளுக்கு வழங்கும் அங்கீகாரங்களை சீரானதாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு அளித்துள்ள அனைத்து வகையான அங்கீகாரங்களையும் திரும்பப் பெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT