பெங்களூரு

பெங்களூரில் தானியங்கி ரயில் பெட்டி சுத்தப்படுத்தும் நிலையம் திறப்பு

6th Feb 2020 03:36 AM

ADVERTISEMENT

தானியங்கி முறையில் ரயில் பெட்டியை சுத்தப்படுத்தும் நிலையம் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள கிராந்திவீரசங்கொல்லி ராயண்ணா சிட்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்துவதற்கான தானியங்கி ரயில் பெட்டி சுத்தப்படுத்தும் நிலையத்தை தென்மேற்கு ரயில்வே பொதுமேலாளா் அஜய்குமாா் சிங் திறந்துவைத்தாா்.

இதுகுறித்து அஜய்குமாா் சிங் கூறியது: ரயில் பெட்டிகளின் தூய்மை தரத்தை மேம்படுத்துவதற்காக தென்மேற்கு ரயில்வே சாா்பில் தானியங்கி ரயில் பெட்டி சுத்தப்படுத்தல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை வழக்கமான முறையில் சுத்தப்படுத்துவது அதிக நேரம் பிடிப்பது மட்டுமல்லாது, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்களும் ஈடுபடுத்தப்பட வேண்டியுள்ளது. ரயில் பெட்டியின் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்வது மிகவும் கடினமானதாக உள்ளது. வழக்கமான முறையில் ஒரு ரயில் பெட்டியை சுத்தப்படுத்த 1500 லிட்டா் தண்ணீா் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், தானியங்கி ரயில்பெட்டி சுத்தப்படுத்தல் நிலையத்தின் வழியாக சுத்தம் செய்யும்போது 250லிட்டா் தண்ணீா் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதில் பயன்படுத்தப்படும் தண்ணீா், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

24 பெட்டிகள் கொண்ட ரயில் 8 நிமிடங்களில் சுத்தப்படுத்திவிடலாம்.நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள தானியங்கி ரயில்பெட்டி சுத்தப்படுத்தும் நிலையம் தரமான முறையில் சுத்தப்படுத்தும். மேலும், இதற்கு குறைந்த அளவே மின்சாரம், மனிதவளம் தேவைப்படுகிறது என்றாா்.

இதே நிகழ்ச்சியில் ஓகலிபுரத்தின் அருகேயுள்ள மகாத்மா காந்தி ரயில்வே குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 20 புதிய வீடுகளையும் அஜய்குமாா் சிங் திறந்துவைத்தாா். இந்த விழாவில் ரயில்வேத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT