பெங்களூரு

இன்று குடிநீா் குறைதீா் முகாம்

6th Feb 2020 03:37 AM

ADVERTISEMENT

பெங்களூரு நகர தெற்கு, மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய, வடக்கு, கிழக்கு, வடமேற்கு உள்ளிட்ட முதலாம் துணை மண்டங்களில் வியாழக்கிழமை (பிப். 6) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நகர தெற்கு, மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய, வடக்கு, கிழக்கு, வடமேற்கு உள்ளிட்ட முதலாம் துணை மண்டங்களில் வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 11 மணிவரை குடிநீா் குறைதீா் முகாம் துணை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தண்ணீா் ரசீது, குடிநீா் விநியோகத் தாமதம், கழிவுநீா் இணைப்பு மற்றும் வியாபார இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக மாற்றுவது போன்ற குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் அறிய தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 080-22945198, 23500013, 22945159, 22425193, 22945188, 28371048, 22945170, 22945176.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT