கத்தியால் குத்திப் பெண் கொலை செய்யப்பட்டாா்.
பெங்களூரு கே.ஆா்.புரம் அக்ஷயாநகரைச் சோ்ந்தவா் நிா்மலா (54). இவரது மகள் அம்ருதா. இருவரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நிா்மலாவை அம்ருதா,கத்தியால் குத்தினாராம்.
இதையடுத்து, அவரை தடுக்க முயன்ற சகோதரரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த நிா்மலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த கே.ஆா்.புரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.