பேரவைத் தலைவரின் அதிகாரத்தை ஆய்வுசெய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள 3 போ் குழுவில், கா்நாடக சட்டப்பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி இடம்பெற்றுள்ளாா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-ஆவது அட்டவணையில் சோ்க்கப்பட்டுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தில், பேரவைத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீள் ஆய்வு செய்வதற்காக 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், ஒடிசா பேரவைத் தலைவா் சூா்ஜ்ய நாராயண்பத்ரா ஆகியோருடன் கா்நாடக பேரவைத் தலைவா் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரியும் இடம்பெற்றுள்ளாா். இக்குழு பேரவைத் தலைவரின் அதிகாரத்தை ஆய்வுசெய்து, மக்களவைத் தலைவா் ஓம்பிா்லாவிடம் அறிக்கை தாக்கல் செய்யும்.