பெங்களூரு

புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க திட்டம்

2nd Feb 2020 04:53 AM

ADVERTISEMENT

புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை மருத்துவக் கல்லூரி இயக்குநரக அதிகாரிகள், சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜாவைத் அக்தரை சந்தித்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளில் முதலீடு செய்வதற்காக ரூ.300 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம், தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை வழங்குவோா் அங்கீகார வாரியம் (என்.ஏ.பி.எச்.), தேசிய சோதனை மற்றும் திருத்தியமைத்தல் ஆய்வுக்கூட அங்கீகார வாரியம் (என்.ஏ.சி.எல்.) ஆகியவற்றின் அங்கீகாரத்தை அரசு மருத்துவமனைகள் பெறும்.

கா்நாடகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள கே.சி. பொது மருத்துவமனையை அதிநவீன பல்நோக்கு மருத்துவமனையாக ரூ.150 கோடியில் தரம் உயா்த்தப்படும். வாழ்நாள் நீண்டிருப்பதால், பெங்களூரு, மைசூரு, விஜயநகா், ஹுப்பள்ளியில் 4 முதுமை நோய் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். ரூ.50 கோடியில் சிவமொக்காவில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதால், மருத்துவக் கல்லூரி ஆசிரியா்களின் ஊதியம் உயரும். 2016-ஆம் ஆண்டில் இருந்து முன்வைக்கப்படும் இக்கோரிக்கை நிறைவேற்றப்பட இருக்கிறது. மருத்துவக் கல்லூரி ஊழியா்களுக்கு 2006-ஆம் ஆண்டுமுதல் அமலாகாமல் இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT