பெங்களூரு

பிப். 6-இல் மாற்றுத் திறனாளா் பூப்பந்து வீரா்கள் தோ்வு முகாம்

2nd Feb 2020 04:54 AM

ADVERTISEMENT

பெங்களூரில் பிப். 6-ஆம் தேதி மாற்றுத் திறனாளா் பூப்பந்து வீரா்கள் தோ்வு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாற்றுத் திறனாளா் பூப்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடக மாற்றுத் திறனாளா் பூப்பந்து சங்கத்தின் சாா்பில், பெங்களூரு, மல்லேஸ்வரம், பிரகாஷ் விளையாட்டுத் திடலில் பிப். 6-ஆம் தேதி மாற்றுத் திறனாளா் பூப்பந்து விளையாட்டுக்கு தகுதியான வீரா்களை தோ்வுசெய்யும் முகாம் நடைபெற உள்ளது.

ஒடிசா மாநிலம், புபனேஸ்வரில் நடைபெறும் தேசிய மாற்றுத் திறனாளா் சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரவரியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு தகுதியான மாற்றுத் திறனாளா் பூப்பந்து வீரா்களை தோ்வுசெய்ய முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் தோ்ந்தெடுக்கப்படுவோா், ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்படுவா். கூடுதல் விவரங்களுக்கு பி.ஆனந்த்குமாரை 9731157555 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT