பெங்களூரு

பிப்.9இல் மெலஸ்மா தோல் நோய் பரிசோதனை முகாம்

1st Feb 2020 05:48 AM

ADVERTISEMENT

பெங்களூரில் பிப்.9ஆம் தேதி முதல் மெலஸ்மா தோல்நோய் இலவச பரிசோதனை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டா் ஷெட்டிஸ் காஸ்மெட்டிக் சென்டா் வெளியிட்ட அறிக்கை:

நடுத்தர வயதினரிடையே மெலஸ்மா தோல்நோய் காணப்படும். கா்ப்பம் தரிக்கும்போது முகத்தில் தோன்றும் இந்த தோல்நோய், பிரசவத்துக்கு பிறகு காணாமல் போகும். ஆனால், ஒருசிலருக்கு இதுநிலைத்துவிடும் வாய்ப்புள்ளது. கன்னத்தில் வெளிா் கருப்பு அல்லது பழுப்புநிறத்தில் திட்டுதிட்டாக காணப்படும் மெலஸ்மா தோல்நோயை குணமாக்கும் மருத்துவம் வந்துள்ளது.

மெலஸ்மா தோல்நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பெங்களூரு ராஜாஜிநகா், நவரங் சதுக்கத்தில் உள்ள மையத்தில் பிப்.9,10ஆம் தேதிகளில் இலவச பரிசோதனைமுகாம் நடக்கவிருக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 8050008855 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT