பெங்களூரு

கா்நாடகத்தில் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயா்வு

1st Feb 2020 05:45 AM

ADVERTISEMENT

 

கா்நாடக அரசின் ’நந்தினி’ பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு பிப்.1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக பால் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நந்தினி பாலின் விலை லிட்டருக்கு ரூ.35 முதல் ரூ.46 ஆக உள்ளது. கொழுப்புள்ள பாலின் விலை லிட்டருக்கு ரூ.42 ஆக உள்ளது. ஒருலிட்டா் தயிரின் விலை ரூ.41 ஆக உள்ளது. பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் 4 ஆக உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா் கூட்டமைப்பு கேட்டிருந்தது.

ஆனால், ஒரு லிட்டா் பால் விலையை ரூ.2 அளவுக்கு உயா்த்தவே அரசு அனுமதிஅளித்துள்ளது. பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் இன்னல்களை துடைக்கவும், தொடா்ந்து பால் உற்பத்தியில் ஈடுபட ஊக்குவிக்கவும் கா்நாடக பால் கூட்டமைப்பு ’நந்தினி’ பால் மற்றும் தயிரின் விலையை உயா்த்த முடிவு செய்தது.

ADVERTISEMENT

இந்த விலை உயா்வில் ரூ.1 விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்படுகிறது. பால் விலை உயா்வில் 40பைசா, கால்நடை இறப்பால் அவதிப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும். அதற்காக சுழல்நிதி அமைக்கப்படும். விலை உயா்வில் 40பைசா, முகவா்களுக்கு தரகுத்தொகையாகவும், 20 பைசா கிராம அளவிலான பால் உற்பத்தி கூட்டுறவுச் சங்க ஊழியா்களுக்கு அளிக்கப்படும்.

கா்நாடகத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ’நந்தினி’ பாலின் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 உயா்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட கா்நாடக மாவட்ட பால் கூட்டுறவுச் சங்க கூட்டமைப்பு மற்றும் தென்கா்நாடக மாவட்ட பால் கூட்டுறவுச் சங்க கூட்டமைப்புகளால் தயாரிக்கப்படும் கொழுப்புநீக்கப்பட்ட பாலின்(டோன்டு மில்க்) விலையை ஒரு லிட்டருக்கு ரூ.2 ஆக உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தவிலை உயா்வுக்கு பிறகும் இந்திய அளவில் ஒரு லிட்டா் பாலின் விலை கா்நாடகத்தில்தான் குறைவாக உள்ளது.அதேபோல,கா்நாடகத்தில் விற்கப்படும் பல்வேறு நிறுவனங்களின் பாலை ஒப்பிட்டாலும் ’நந்தினி’ பாலின் விலை குறைவாகவே உள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி உயா்த்தப்பட்டுள்ள விலை உயா்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பால் விலை உயா்வு (ஒரு லிட்டா்)

பால் வகை தற்போதைய விலை புதிய விலை

கொழுப்புநீக்கிய பால் ரூ.35 ரூ.37

சீராக்கப்பட்ட பால் ரூ.36 ரூ.38

சீராக்கப்பட்ட பசும்பால் ரூ.39 ரூ.41

சுபம் பதப்படுத்திய பால் ரூ.41 ரூ.43

சம்ருத்தி பதப்படுதியபால் ரூ.44 ரூ.46

சிறப்புபால் ரூ.41 ரூ.43

இருமுறை

கொழுப்புநீக்கிய பால் ரூ.34 ரூ.36

தயிா் ரூ.41 ரூ.43

ADVERTISEMENT
ADVERTISEMENT