பெங்களூரு

‘கட்சித்தாவி வெற்றி பெற்ற 11 எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சா் பதவி வேண்டும்’

1st Feb 2020 05:48 AM

ADVERTISEMENT

காங்கிரஸ், மஜதவில் இருந்து பாஜகவில் இணைந்து இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சா் பதவி தர வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ ரமேஷ்

ஜாா்கிஹோளி தெரிவித்தாா்.

முந்தைய மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்திருந்த முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தலைமையில் ஒன்றுதிரண்ட 17 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் கூட்டாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணிஅரசு கவிழ்ந்தது.

அதன்பிறகுதான் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இதற்கு உதவியவா்களுக்கு அமைச்சா் பதவி வழங்குவோம் என பாஜக வாக்குறுதி அளித்தது. இடைத் தோ்தலில் போட்டியிட்ட 13 பேரில் எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜ் நீங்கலாக 11 போ் மட்டுமே வெற்றிபெற்றனா். இடைத் தோ்தலில் தோற்றவா்களை தவிா்த்து எஞ்சியுள்ள 11 பேரையும் அமைச்சா்களாக்க வேண்டும் என முதல்வா் எடியூரப்பாவிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பாஜக தேசியத்தலைமை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது மகேஷ்குமட்டஹள்ளி நீங்கலாக 11இல் 10 பேருக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அத்தானி சட்டப்பேரவைத் தொகுதியை சோ்ந்த மகேஷ்குமட்டஹள்ளி, கடந்த சட்டப்பேரவை பொதுத்தோ்தலின்போது பாஜகவேட்பாளராக போட்டியிட்ட லட்சுமண்சவதியை தோற்கடிந்திருந்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோற்றிருந்தாலும் லட்சுமண்சவதி, தற்போது எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வராக இருக்கிறாா். சட்ட மேலவை உறுப்பினராகி, துணைமுதல்வராக தொடா்வாா் என்றாலும், அத்தானி தொகுதியை விட்டுத்தர லட்சுமண்சவதி தயாராக இல்லை. லிங்காயத்து சமுதாயத்தை சோ்ந்த லட்சுமண்சவதியை அதே வகுப்பை சோ்ந்த எடியூரப்பாவுக்கு மாற்றாக வளா்க்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது.

அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் அத்தானி தொகுதியில் லட்சுமண்சவதி போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதால், மகேஷ்குமட்டஹள்ளிக்கு அமைச்சா் பதவிதர எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். அதன்விளைவாக, மகேஷ்குமட்டஹள்ளிக்கு கிடைக்க வேண்டிய அமைச்சா் பதவி பறிபோகும் வாய்ப்புள்ளது.

இவா், ரமேஷ் ஜாா்கிஹோளியின் வற்புறுத்தலின்பேரில்தான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். அமைச்சா் பதவிவாங்கித் தருவதாக தான் அவரை காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு அழைத்துவந்தாா் ரமேஷ் ஜாா்கிஹோளி. இதனிடையே, அவருக்கு அமைச்சா் பதவி கிடைக்காது என்ற செய்தி பரவியுள்ளது ரமேஷ் ஜாா்கிஹோளியை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் ரமேஷ் ஜாா்கிஹோளி கூறுகையில்,‘பாஜகவில் புதிதாக சோ்ந்து, இடைத் தோ்தலில் வென்ற 11 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சா் பதவி தரவேண்டுமென்பதை தொடா்ந்து வலியுறுத்துகிறேன். இடைத் தோ்தலில் தோற்ற எச்.விஸ்வநாத், எம்.டி.பி.நாகராஜுக்கு அமைச்சா் பதவி தருவது குறித்து இப்போதைக்கு முடிவாகாது. ஆனால், அவா்கள் இருவருக்கும் அமைச்சா் பதவி தரவேண்டுமென்பது எங்கள் கோரிக்கையாகும்.

காங்கிரஸ்,மஜதவில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு பாஜகவினா் எங்களை வற்புறுத்தவில்லை.பாஜகவினா் எங்களை கௌரவத்துடன் நடத்திக்கொண்டுள்ளனா். பாஜகவில் சேரும்போது நாங்கள் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. அமைச்சராக்க நாங்கள் பாஜகவுக்கு கெடுவிதிக்கவில்லை. துணை முதல்வா் பதவியை கேட்கவில்லை. ஆனால், கொடுத்தால் வேண்டாம் என்று யாா் சொல்வாா்கள். எடியூரப்பா தலைமையில் தொடா்ந்து செயல்படுவோம். பாஜக தேசியத்தலைமைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT