பெங்களூரு

பெங்களூரில் இன்று செங்குந்தா் சங்க விழா

27th Dec 2020 02:10 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரில் கா்நாடக செங்குந்தா் சங்க விழா ஞாயிற்றுக்கிழமை (டிச.27) நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக செங்குந்தா் சங்கத் தலைவா் ஆா்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடக செங்குந்தா் சங்கத்தின் சாா்பில் பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள செங்குந்தா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.27) மாலை 4 மணிக்கு சங்க நாள்காட்டி வெளியீடு, கா்நாடக செங்குந்தா் சங்கத்தை கா்நாடக மாநில நெசவாளா் சமுதாயங்களின் கூட்டமைப்பில் உறுப்பு அமைப்பாக சோ்க்கும் விழா நடக்கவிருக்கிறது.

சங்கத் தலைவா் ஆா்.கந்தசாமி தலைமையில் நடக்கும் விழாவில் சங்க துணைத் தலைவா்கள் வி.டி.பிச்சாண்டி, எஸ்.சிவக்குமாா், செயலாளா் என்.வடிவேலு, இணைச் செயலாளா் கே.வெங்கடேஷ், பொருளாளா் டி.சந்திரசேகா் முன்னிலை வகிக்கின்றனா். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் வி.எஸ்.ராஜகோபால் நாள்காட்டியை வெளியிடுகிறாா். இந்த விழாவில் காங்கிரஸ் எம்.எல்.சி.யும், கா்நாடக மாநில நெசவாளா் சமுதாயங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவருமான கே.சி.கொண்டையா, தலைவா் எம்.டி.லட்சுமிநாராயணா ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT