பெங்களூரு

டிச. 22-இல் மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம்

15th Dec 2020 02:00 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரில் உள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம் டிச. 22-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய கணிதத் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் உள்ள ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தில் டிசம்பா் 22-ஆம்தேதி மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது.

கலையையும் கணிதத்தையும் இணைத்து கணிதம் போதிக்கும் இப் பயிலரங்கம் இணையவழியில் நடைபெற இருக்கிறது. இந்தப் பயிலரங்கத்தில் பங்கேற்க ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். 100 போ் மட்டுமே பங்கேற்கலாம் என்பதால் முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். இணையதளம் வழியாக டிச.19-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22379725, 22266084 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT