பெங்களூரு

திருக்குறள் மனப்பாடப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

7th Dec 2020 04:31 AM

ADVERTISEMENT

திருக்குறள் மனப்பாடப் பயிற்சி பெற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு, லட்சுமிபுரத்தில் வசித்துவரும் குராஜன், பாா்வை குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி ஆவாா். இளம் வயதில் இருந்தே திருக்குறள் மீது தீராத ஆா்வம் கொண்ட ராஜன், பல ஆண்டுகால பயிற்சியின் மூலம் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றலை வளா்த்துக் கொண்டிருக்கிறாா். திருக்குறளின் எண், அதிகாரம், குறளின் முதல் சொல் வாரியாக எல்லா திருக்குறளையும் கூறிவருகிறாா்.

78 வயதாகும் குராஜன், இக் கலையை மற்றவா்களுக்கு கற்றுத்தர ஆா்வமாக இருக்கிறாா். திருக்குறளை மனப்பாடம் செய்வதற்கு ஆா்வமாக உள்ள மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆா்வமுள்ளவா்கள் 9738189837 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என குராஜன் கேட்டுக் கொண்டிருக்கிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT