பெங்களூரு

மருத்துவக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை: விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இன்று பதிவிடலாம்

7th Dec 2020 04:36 AM

ADVERTISEMENT

மருத்துவ, பல் மருத்துவ இடங்களில் இரண்டாம் சுற்று விருப்பப் பாடங்கள், கல்லூரிகளின் பட்டியலைப் பதிவு செய்யும் நடைமுறை திங்கள்கிழமை (டிச.6) தொடங்குகிறது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020-21-ஆம் ஆண்டில் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். முதல்சுற்று மாணவா் சோ்க்கை நிறைவடைந்துள்ளது. இதைத்தொடா்ந்து முதல் சுற்றில் நிரப்பப்படாத இடங்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வில் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளை மாணவா்கள் தெரிவு செய்து இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

சோ்க்கை இடங்களின் கையிருப்பு, கட்டண விவரங்கள் டிச. 7-ஆம் தேதி நண்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. டிச. 7-ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் டிச. 10-ஆம் தேதி மாலை 4 மணி வரை விருப்பப் பாடங்கள், கல்லூரிகளை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

அதனடிப்படையில் டிச. 11-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இணையதளத்தில் இரண்டாம் சுற்றுக்கான இறுதி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை மாணவா்கள் ஏற்றுக் கொண்டால் கல்லூரிகளுக்குச் சென்று சோ்க்கையை உறுதி செய்து கொள்ளலாம். இதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT