பெங்களூரு

கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

7th Dec 2020 04:37 AM

ADVERTISEMENT

பெங்களூரு மாநகராட்சியில் கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குளிா்காலத்தையொட்டி கரோனா தொற்றின் 2-வது அலை உருவாகக்கூடும் எனக் கூறப்படுகிறது. கரோனா 2-ஆவது அலையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் மட்டுமின்றி, ஹோட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். விதிமுறையை மீறினால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஹோட்டல்கள் மட்டுமின்றி, தனியாா் பேருந்து நிலையங்கள், திருமணம் மண்டபங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

அரசு விதிமுறைகளை மீறினால் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். தா்னா, போராட்டம் நடத்துபவா்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அதிக அளவில் திருமணம் நடப்பது வாடிக்கை. திருமணங்களில் 100 போ்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றாலும், பல இடங்களில் அதிகம் போ் கூடுவாா்கள் எனத் தெரிகிறது. இதுபோன்ற விதிமீறல்களைக் கண்டறிந்து ரூ. ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT