பெங்களூரு

போக்குவரத்து விதிமீறல்: ரூ. 3.34 கோடி அபராதம் வசூல்

DIN

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 79,359 வழக்குகளைப் பதிவு செய்த போலீஸாா் ரூ. 3.34 கோடி அபராதம் வசூல் செய்தனா்.

இதுகுறித்து மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரின் பல்வேறு இடங்களில் கடந்த நவம்பா் மாதத்தில் போக்குவரத்து போலீஸாா், வாகன சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது, சிக்னலைத் தாண்டியது உள்ளிட்ட 79,359 வழக்குகளைப் பதிந்த போக்குவரத்து போலீஸாா் ரூ. 3.34 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT