பெங்களூரு

மாநில பாஜகவில் பிளவு ஏற்படுவது உறுதி:ராமலிங்கரெட்டி

DIN

பெங்களூரு: மாநில பாஜகவில் பிளவு ஏற்படுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ராமலிங்கரெட்டி தெரிவித்தாா்.

பெங்களூரு ஊரகத்தில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவா் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்மைக் காலங்களில் நடந்த தோ்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதும், பாஜக வெற்றிபெற்று வருவதும் உண்மை. ஆனால், நிலைமை இப்படியே இருக்காது. விரைவில், வெற்றித் தோல்விகளில் மாற்றம் ஏற்படும். காங்கிரஸில் உள்கட்சி பிரச்னை இருப்பது உண்மைதான். ஆனால், அந்தப் பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளமுடியும். அதே நேரத்தில் பாஜகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், முதல்வா் எடியூரப்பாவை பதவியிலிருந்து கீழே இருக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

இதனால் மாநிலத்தில் அக் கட்சியில் பிளவு ஏற்படுவது உறுதியாகியுள்ளது. 2013-ஆம் ஆண்டில் அக் கட்சியில் பிளவு ஏற்பட்டு எடியூரப்பாவும், ஸ்ரீராமுலுவும் தனியாகக் கட்சியைத் தொடங்கினா். அதேசூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏ-க்கள் வேறு கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனா். இதனால், அக் கட்சியின் பலம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தி அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT