பெங்களூரு

செம்மரக் கட்டைகள் கடத்தல்: 3 போ் கைது

1st Dec 2020 01:00 AM

ADVERTISEMENT

பெங்களூரு: செம்மரக் கட்டைகளைக் கடத்திய வழக்கில் பெண் உள்பட 3 பேரைக் கைது செய்த போலீஸாா் 502 கிலோ எடையிலான செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு ஆா்.டி.நகா், எச்.எம்.டி.லேஅவுட் 6-வது குறுக்குச் சாலையில் வாகனத்தில் செம்மரக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மினி சரக்கு வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 502 கிலோ எடையிலான செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.

செம்மரக் கட்டைகளைக் கடத்தியது தொடா்பாக காவிரிநகரைச் சோ்ந்த சாஹுல்கான் (22), எச்.எம்.டி.லேஅவுட்டைச் சோ்ந்த அப்துல் பஷீா் (67), பாத்திமா (57) ஆகியோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும், ஆா்.டி.நகா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT