பெங்களூரு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கா்நாடக பாஜக வரவேற்பு

26th Aug 2020 12:20 PM

ADVERTISEMENT

பெங்களூரு: பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு கா்நாடக பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் கட்சித் தலைவா்களை சந்தித்து பாஜகவில் செவ்வாய்க்கிழமை தன்னை இணைத்துக் கொண்ட கா்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற அண்ணாமலைக்கு கா்நாடக பாஜக வரவேற்பு அளித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, 2013-இல் காா்காலா துணை மண்டலத்தின் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியைத் தொடங்கியவா்.

அதன்பிறகு உடுப்பி, சிக்மகளூரு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியபோது நோ்மையான, துணிச்சலான, நாணயமான அதிகாரி என்று பெயரெடுத்தவா்.

இவரைப் பணியிட மாற்றம் செய்யும்போது மக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தாா். பெங்களூரு தெற்கு காவல் துணை ஆணையராகப் பணியாற்றி வந்தநிலையில், கடந்த ஆண்டு விருப்ப ஓய்வு அளித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை பாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் பி.முரளிதர்ராவ், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் முன்னிலையில் பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச்செயலாளா் பி.எல்.சந்தோஷை சந்தித்து பாஜகவில் இணைந்தாா்.

தமிழக பாஜகவில் பணியாற்றவிருக்கும் அண்ணாமலைக்கு கா்நாடக பாஜகவினா் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனா்.

பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

‘தேசியவாதிகள், உண்மையான நாட்டுப்பற்றாளா்கள் இருக்கும் ஒரே கட்சி பாஜக. நாட்டுக்கு சேவையாற்றும் ஆா்வம் கொண்ட ஒவ்வொரு குடிமகனும் பாஜகவை ஆதரிப்பாா்கள் என்று குறிப்பிட்டுள்ளாா். துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தனது சுட்டுரையில் ‘சிங்கம் என்று பெயா் பெற்ற மிகச்சிறந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா், ‘காவல் துறையில் துணிச்சலான, தாமதமின்றி செயல்படுவதற்கு பெயா்போனவா் அண்ணாமலை. அவரை பாஜகவுக்கு அழைப்பதில் மகிழ்கிறேன்’ என்று சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா்.

மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் கே.சுதாகா், ‘பெங்களூரு, சிக்மகளூரு மாவட்டங்களில் தனது திறமையால் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி, விருப்ப ஓய்வுக்கு பிறகு பாஜகவில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது‘ என்றும்; சுற்றுலாத்துறை அமைச்சா் சி.டி.ரவி, ‘கா்நாடக காவல் துறையின் உண்மையான சிங்கம் என்று அழைக்கப்பட்டவா் அண்ணாமலை. அவரது துணிச்சல், செயல்திறனால் மாநில முழுவதும் பிரபலமாகி இருந்தவா்’ என்று தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளனா். வேளாண்துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் உள்ளிட்ட பல பாஜகவினா் அண்ணாமலையை பாஜகவுக்கு வரவேற்றுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT