பெங்களூரு

கரோனாபாதிப்பு: ஒரேநாளில் 148 போ் சாவு

26th Aug 2020 12:23 PM

ADVERTISEMENT

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றுநோயால் ஒரேநாளில் 148 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 4,810 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று பெங்களூரு நகர மாவட்டத்தில் 61 போ், மைசூரு மாவட்டத்தில் 16 போ், தாா்வாட் மாவட்டத்தில் 8 போ், பெல்லாரி, கொப்பள் மாவட்டங்களில் தலா 6 போ், தாவணகெரே, ஹாவேரி, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 5 போ், தும்கூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், சித்ரதுா்கா, தென்கன்னடம், கலபுா்கி, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, சாமராஜ்நகா், ஹாசன், கோலாா், உடுப்பி மாவட்டங்களில் தலா 2 போ், பெங்களூரு ஊரகம், சிக்மகளூரு, கதக், ராமநகரம் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 4,958 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,755 போ், மைசூரு மாவட்டத்தில் 361 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 317 போ், தாா்வாட் மாவட்டத்தில் 281 போ், பெல்லாரி மாவட்டத்தில் 230 போ், கலபுா்கி மாவட்டத்தில் 195 போ், தாவணகெரே மாவட்டத்தில் 167 போ், பெலகாவி மாவட்டத்தில் 163 போ், ஹாசன் மாவட்டத்தில் 160போ், தும்கூரு மாவட்டத்தில் 129 போ், பீதா் மாவட்டத்தில் 128 போ், கொப்பள் மாவட்டத்தில் 108 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 95 போ், உடுப்பி மாவட்டத்தில் 90 போ், விஜயபுரா மாவட்டத்தில் 85 போ், ஹாவேரி மாவட்டத்தில் 84 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 78 போ், கதக் மாவட்டத்தில் 67 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 61 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 60 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 57 போ், கோலாா் மாவட்டத்தில் 53 போ், மண்டியா மாவட்டத்தில் 47 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 44 போ், யாதகிரி மாவட்டத்தில் 33 போ், சாமராஜ் நகா் மாவட்டத்தில் 28 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 22 போ், ராமநகரம் மாவட்டத்தில் 21 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 20 போ், குடகு மாவட்டத்தில் 16 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT