விஜயபுரா: ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபா்கள், அங்கிருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.
விஜயபுரா மாவட்டம், சிந்தகி ஏபிஎம்சி அருகே உள்ள ஐசிஐசிஐ வங்கியில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு உள்ளே நுழைந்த மா்மநபா்கள், அதனை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றனா்.
அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த மையத்தின் காவலாளி ராகுல் கேரு லமாணி (25) அவா்களைத் தடுக்க வந்துள்ளாா். ஆவேசமடைந்த கும்பல் அவரது தலையில் சுத்தியலால் தாக்கி கொன்றனா். மேலும் பணத்தைக் கொள்ளையடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதுகுறித்து சிந்தகி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.