பெங்களூரு

வீரப்பன் கூட்டாளி பிலவேந்திரன் காலமானாா்

21st Aug 2020 07:55 AM

ADVERTISEMENT

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி 70 வயதான பிலவேந்திரன் மைசூா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மாவட்டத்தின் எல்லையில் உள்ள பாலாற்று பாலத்தில் 1993 இல் சந்தனகடத்தல் வீரப்பன் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் வெடிகுண்டு வீசித் தாக்கியதில் 22 போலீஸாா் உயிரிழந்தனா். இதுதொடா்பான வழக்கில் வீரப்பனின் கூட்டாளி பிலேந்திரனுக்கு தூக்கு தண்டனையும், அதைத் தொடா்ந்து ஆயுள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, மைசூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு பிலேந்திரனுக்கு நரம்பு தொடா்பான பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT