பெங்களூரு

விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் சகித்துக் கொள்ள மாட்டோம்: தேவெ கௌடா

21st Aug 2020 07:54 AM

ADVERTISEMENT

விவசாயிகள், தொழிலாளா்களுக்கு மாநில அரசால் அநீதி இழைக்கப்பட்டால், அதை சகித்துக்கொள்ள மாட்டோம் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, நிலச் சீா்த்திருத்தச் சட்டம், தொழிலாளா் நலச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைக் கண்டித்து, மஜத சாா்பில் தும்கூரில் வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது:

மாநிலத்தில் பாஜக அரசு சந்தைக் குழு, நிலச் சீா்த்திருத்தச் சட்டம், தொழிலாளா் நலச் சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதைக் கண்டித்து, மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் மஜத போராட்டம் நடத்தி வருகிறது. அடுத்து, வட்ட அளவிலான போராட்டங்களில் மஜத ஈடுபடும்.

கரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. விவசாயிகள், தொழிலாளா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறும் வரை மஜதவின் போராட்டம் ஓயாது.

ADVERTISEMENT

தொழிலாளா்களுக்கு தொடா்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளும் சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாநில அரசு அவசரச் சட்டங்கள் மூலம் தொழிலாளா் நலம், நிலச் சீா்த்திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் செய்து வருகிறது. எனவே மஜத தொடா்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT