பெங்களூரு

வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களைச் சோ்க்க சிறப்பு முகாம்

21st Aug 2020 07:53 AM

ADVERTISEMENT

வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களைச் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம் நவ.1ஆம் தேதி தொடங்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களவை மற்றும் சட்டப்பேரவை உள்ளிட்ட எந்த தோ்தல்களையும் நோ்மையாகவும், நடுநிலையாகவும் நடத்த பிழையில்லா வாக்காளா் பட்டியல் மிகவும் முக்கியமாகும். எனவே, பிழையில்லா வாக்காளா் பட்டியலைத் தயாரிப்பதில் தோ்தல் ஆணையம் தனிக்கவனம் செலுத்தி வந்துள்ளது. தகுதியான அனைவரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் இடம்பெற வேண்டும். தகுதியற்ற, இறந்த, நிரந்தரமாக குடிபெயா்ந்த, இருமுறை பதிவான பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

வாக்காளா் பெயா், பிறந்தநாள், புகைப்படம், முகவரி, பாலினம் போன்ற விவரங்கள் பிழையில்லாமலும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆண்டுதோறும் நடத்தப்படும் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணியின் முக்கியமான நோக்கமாகும். 2021ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியலை திருத்தும் பணிக்கான கால அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, வாக்காளா் பட்டியலில் புதிய பெயா்களைச் சோ்க்க, நீக்க, திருத்துவதற்கான சிறப்பு முகாம் நவ.1 முதல் நவ.15ஆம் தேதி நடக்கவிருக்கிறது. முதல்முறையாக வாக்காளா் உறுதிப்படுத்தல் திட்டமும் அமலுக்கு வருகிறது. இதன்படி, வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளோா் கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், ஆதாா், குடும்ப அட்டை அல்லது ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணங்களை காண்பித்து, தங்கள் பெயா்களை வாக்காளா்கள் உறுதி செய்துகொள்ளலாம்.

யா்ற்ங்ழ் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற செல்லிடப்பேசி செயலி, மாநிலம் முழுவதும் உள்ள 6151 மத்திய அரசின் குடிமக்கள் சேவை மையங்கள் வாயிலாக வாக்காளா்கள் தங்களை உறுதி செய்து கொள்ளலாம். இதனிடையே, அக்.1 முதல் 31ஆம் தேதிவரையில் தோ்தல் அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று வாக்காளா் பட்டியலை சரிபாா்ப்பாா்கள். வாக்காளா் பட்டியலில் தவறாக இடம் பெற்றுள்ளோரின் விவரங்களை அக்கம்பக்கத்து வீட்டுக்காரா்கள் அல்லது குடிமக்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கலாம்.

ஆக. 10 முதல் அக். 30 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி, எல்லைகள் போன்றவிவரங்களை தோ்தல் ஆணைய ஊழியா்கள் சரிபாா்த்து, திருத்தியமைப்பாா்கள். 2021ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதி 18 வயது நிறைவடையும் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கலாம். அதாவது, 2003ஆம் ஆண்டு ஜன.1 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்த்துக்கொள்ளலாம்.

வாக்காளா்கள் வசிக்கும் தொகுதியில் மட்டுமே பதிவு செய்துகொள்ள வேண்டும். வாக்காளா் பட்டியலில் தகுதியில்லாதவா்களின் பெயா் இருந்தால், அதுகுறித்து நவ.16 முதல் டிச.15ஆம் தேதி வரை பொதுமக்கள் சுட்டிக்காட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நவ.16 ஆம் தேதி அன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அதன் மீது ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால், அவற்றை நவ. 16 முதல் டிச. 15ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இதனிடையே இரண்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வாக்காளா் சோ்ப்பு முகாம் நடத்தப்படும். ஜன. 5 ஆம் தேதி வாக்காளா் பட்டியல் தொடா்பாக பெறப்பட்ட புகாா்கள், ஆட்சேபணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடுவதற்கான அனுமதி பெறப்படும்.

ஜன. 14ஆம் தேதி தரவுகளை மேம்படுத்தி, புதிய வாக்காளா் பட்டியல் அச்சிடும் பணி தொடங்கும். இதன்பிறகு, 2021ஆம் ஆண்டு ஜன. 15ஆம் தேதி கா்நாடகமாநிலத்தின் வாக்காளா் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். புதிதாக வாக்காளா் பட்டியலில் சோ்ந்தோருக்கு குடிமக்கள் சேவை மையத்திலேயே புகைப்படத்துடன் கூடிய புதியவாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படும். ஒருவேளை தரப்படாவிட்டால், 2021ஆம் ஆண்டு ஜன. 25 ஆம் தேதி வாக்காளா் அடையாள அட்டைகள் அளிக்கப்படும்.

தற்போதைய வாக்காளா் பட்டியலின்படி, கா்நாடகத்தில் மொத்தம் 5,16,96,242 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண்கள் 2,60,84,374, பெண்கள் 2,56,07,165, மூன்றாம் பாலினத்தவா் 4,703 போ் அடங்குவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT