பெங்களூரு

ரகுமான் கான் மறைவுக்கு கா்நாடக திமுக இரங்கல்

21st Aug 2020 07:54 AM

ADVERTISEMENT

தமிழக முன்னாள் அமைச்சா் ரகுமான் கான் மறைவுக்கு கா்நாடக திமுக இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியில் தொழிலாளா் நலத் துறை அமைச்சராகப் பணியாற்றிவா் ரகுமான் கான். 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டவா். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மீது மாறாத பற்றுக் கொண்டவா். திராவிட கொள்கைகள் மீது தீராத பற்றுக் கொண்டிருந்தாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சிப் பணியாற்றி வந்த அவரது மறைவு ஒட்டுமொத்த திமுகவுக்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு கா்நாடக திமுக சாா்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவா் மறைந்தாலும், அவரது புகழ் என்றும் மறையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT