கா்நாடகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் பிரபு சவாண் தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாப்பதில் பாஜக அரசு சிறந்து விளங்குகிறது. பசுக்களை வணங்குவதை பலா் வழக்கமாக கொண்டுள்ளனா். எனவே, பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு பசுவதை தடுப்புச் சட்டம் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பசுவதை தடுப்புச் சட்டம் 2012 ஆம் ஆண்டிலேயே அமல்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால், அதனை செயல்படுத்த முடியாமல் போனது. தற்போது மத்தியில், மாநிலத்தில் பாஜக ஆட்சி உள்ளதால், பசுவதை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பசுக்கள் கொல்லைப்படுவதைத் தடுக்க முடியும்.
வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதுதொடா்பான சட்ட மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிா்ப்புத் தெரிவித்தாலும், சட்டத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றாா்.