பெங்களூரு

பெங்களூரு கலவர அறிக்கை கிடைத்த பிறகே மதவாத அமைப்புகளைத் தடை செய்யத் திட்டம்: சட்டத் துறை அமைச்சா் மாதுசாமி

21st Aug 2020 07:55 AM

ADVERTISEMENT

பெங்களூரு கலவரம் தொடா்பாக முழுமையான அறிக்கை கிடைத்த பிறகே அதில் தொடா்புடைய அமைப்புகளைத் தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் கா்நாடக சட்டத் துறை அமைச்சா் மாதுசாமி.

பெங்களூரு, விதான சௌதாவில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆக.11ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற கலவரத்தின் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் மதவாத அமைப்புகளைத் தடை செய்வது தொடா்பாக கா்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.

அனைத்து அமைச்சா்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனா். கலவரத்தின் பின்னணியில் உள்ள அமைப்புகள் குறித்து அதிகாரப்பூா்வமான அறிக்கை எதுவும் இதுவரை பெறப்படவில்லை. இதுதொடா்பான முழுமையான அறிக்கை கிடைத்த பிறகே இறுதி முடிவெடுக்கப்படும். தேவை ஏற்பட்டால், தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்யவும் தயங்க மாட்டோம் என்றாா்.

ADVERTISEMENT

பெங்களூரில் நடந்த கலவரத்தின் பின்னணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இருக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்தக் கட்சியை தடை செய்ய கோரிக்கை எழுந்தது. ஆக. 13-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசிய உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘கலவரம் தொடா்பாகத் திரட்டப்பட்ட தகவல்கள், காணொலிக் காட்சிகளின் அடிப்படையில், கலவரத்தின் பின்னணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பங்களிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடத்தப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT